அண்ணன் - தம்பியாக அப்பா-மகன்..! லிங்குசாமியின் சூப்பர் ஐடியா..!!

நடிகர் திலகம் சிவாஜி காலத்தில் இப்படி நடந்திருக்கிறது. சிவாஜியின் சில படங்களில் அவரது தம்பியாக நடித்துள்ளார் அவரது மகனான இளைய திலகம் பிரபு. வேறு எந்த அப்பா-மகன் நடிகர்களும் இது மாதிரி நடித்ததாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை..
இப்போது அதுபோன்ற ஒரு ஆச்சர்யத்தில் மீண்டும் நம்மை ஆழ்த்த தயாராக இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. மம்முட்டியையும் அவரது மகனான துல்கர் சல்மானையும் அண்ணன்-தம்பியாக இணைத்து ஒரு தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழி படமொன்றை இயக்கவேண்டும் என்கிற தனது ஆசையை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார் லிங்குசாமி.
லிங்குசாமியின் முதல் படமான ‘ஆனந்தம்’ படத்தின் வெற்றி நாயகன் என்கிற வகையில் மம்முட்டி இதற்கு சம்மதிக்க வாய்ப்பு அதிக இருப்பதாகவே தெரிகிறது. தனது மகனை தமிழிலும் ஸ்திரமான இடத்திற்கு கொண்டுவர மம்முட்டி விரும்புவதால் இது சாத்தியாமாகும் வாய்ப்பும் இருக்கிறது.. அப்படி சாத்தியமானால் நன்றாக இருக்கும்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
