செடிகுச்சி சிலம்பத்தில் அசத்துகிறார் தன்ஷிகா..!

ஆறடி உயரத்தில் மட்டுமல்ல அற்புதமான தற்காப்பு கலையிலும் நம்மை அசத்துகிறார் தன்ஷிகா.. செடிகுச்சி சிலம்பம் என்கிற சண்டைப்பயிற்சியை கற்றுள்ள தன்ஷிகா, தற்போது, தான் நடித்து வரும் ‘காத்தாடி’ படத்தின் சண்டைக்காட்சிகளில் செய்துகாட்டி அசத்தியிருக்கிறாராம்.
மார்ஷியல் ஆர்ட்ஸின் ஒரு பாகமான இந்த கலையை சர்வதேச சிலம்ப அமைப்பின் துனைத்தலைவரான பாண்டியன் என்பவரிடம் இருந்து கற்றிருக்கிறார் தன்ஷிகா.. இன்னும் சொல்லவேண்டுமென்றால் இந்தக்கலை வர்மக்கலையின் ஒரு பகுதி என்றும் சொல்லப்படுகிறது.
‘காத்தாடி’ படத்தில் கொள்ளைக்காரகளிடம் சிக்கிக்கொண்ட குழந்தைகளை காப்பாற்றும்போது எதிரிகளுடன் மோதும் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்துள்ளதோடு தான் கற்ற கலையையையும் அதில் பிரயோகித்துள்ளாராம் தன்ஷிகா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
