சித்தார்த்துக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா...?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் நடித்துள்ள ‘ஜிகர்தண்டா’ படம் முடிவடைந்தபின் சில மாதங்கள் அதன் ரிலீஸ் தள்ளிப்போனது உண்மைதான். ஆனால் இப்போது சன் பிக்சர்ஸ் அந்தப்படத்தை வெளியிடுவதால் ஜூலை-25க்கு அதன் ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள். அதற்கான வேலைகளும் துரிதமாக நடைபெற்று வந்தன..
இந்த நிலையில் ஒரு சிலர் படம் 25ல் ரிலீஸாகாது என்றும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு செய்தி இணையத்தில் பரவியது.. ஆனால் படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான சித்தார்த், “இதில் துளிகூட உண்மையில்லை.. இது வேலையற்ற வீணர்களின் வதந்தி. படம் அறிவித்தபடி ஜூலை-25ல் வெளியாகும்” என மறுத்து ட்வீட் பண்ணியிருந்தார்.
ஆனால் அந்தோ அதிர்ச்சி.. இப்படி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட விவரம் அவருக்கே லேட்டாகத்தான் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்கவோ, அட்லீஸ்ட் தகவல் தெரிவிக்கவோ கூட இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். “ஸாரி ரசிகர்களே.. எங்களால் முடிந்த அளவுக்கு நாங்கள் முயற்சி செய்தோம்.. ஆனால் நிலைமை எங்கள் கையை மீறிப்போய்விட்டது” என்கிற அர்த்தத்தில் இதற்கும் வருத்தத்துடன் ட்வீட் பண்ணியுள்ளார் சித்தார்த். .
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
