Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் அப்பாவாக நடிக்கிறார் அஜித்..!

•On July 21, 2014
Ajith
Share

தற்போது கௌதம் மேனன் டைரக்ஷனில் நடித்துவரும் அஜித், இந்தப்படத்தில் ஒரு சின்னக்குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறார். தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பது அவருக்கு ஒன்றும் புதிது இல்லையே.. ஏற்கனவே சிட்டிசன், வரலாறு, அசல் என மூன்று படங்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர்தானே..

ஆனால் அந்தப்படங்களில் எல்லாம் தானே தந்தையாகவும் மகனாகவும் இரண்டு வேடங்களில் நடித்த அஜித் தற்போது தான் முதன் முறையாக ஒரு சின்ன குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கும் த்ரிஷா சில தினங்களுக்கு முன்புதான் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.