சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ’ஹஸ்பண்ட் ரெஸ்ட் பூத்’!

உலகெங்கும் உள்ள மால்களில் திருமணம் நடந்தவர்கள் படும் துயரத்தை நாம் பார்க்கிறோம். மனைவி ஷாப்பிங் செய்யும் போது, கணவர் பின்னாடியே செல்வது மிகவும் கடுப்பாக இருக்கும். அதற்கு சீனா ஒரு தீர்வை கண்டறிந்துள்ளது. புதிதாக ’ஹஸ்பண்ட் ரெஸ்ட் பூத்’ என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனைவியோ அல்லது வேறு யாராவதோ ஷாப்பிங் செல்லும் போது, கணவரோ அல்லது மற்றவரோ பூத்தில் அமர்ந்து கொள்ளலாம். அங்கு மசாஜ் செய்யும் இருக்கை, கேம்ஸ், நீண்ட திரை வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் தயாரிப்பாளர்கள், உலகின் முதல் மினி - மேன் குகைகள் சீனாவில், அதுவும் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மால் ஒன்றில் மொத்தம் 4 பூத்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு 40,000 yuan அல்லது $6000 செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைய்ந்தால், மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
