அஜீத் நடித்த ‘விவேகம்’ ஆகஸ்ட் 10ல் வெளியீடு !

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள படம் "விவேகம்". இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். "விவேகம்" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை செர்பியாவில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும், ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனை படக்குழு மறுத்திருக்கிறது.
படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முன்பே தொடங்கிவிட்டதால், திட்டமிட்டப்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. எவ்வித தொய்வுமில்லை. உறுதியாக ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும். விரைவில் படத்தின் தணிக்கைக்கு அனுப்பவுள்ளோம் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postமயிலை வேட்டையாடிய 3 பேர் கைது!
