ஒரு வார்த்தையால் சிக்கலில் மாட்டிய விஜய்சேதுபதி - கிருஷ்ணா..!

ஒருவர் இயக்குனராவதற்காக தொடர்ந்து 25 வருடம் போராட முடியுமா..? முடியும் என விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் சாதித்து காட்டியுள்ளார் ‘வன்மம்’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஜெயகிருஷ்ணா. அதற்காக அவருக்கு கிடைத்துள்ள தயாரிப்பாளரும் நடிகர்களும் ஏதோ சாதரணமானவர்கள் அல்ல..
இன்று முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஹிதேஷ் ஜபக் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். விஜய்சேதுபதி, கிருஷ்ணா என இரண்டு ஹீரோக்கள்.. லட்டு மாதிரி ஹீரோயின் சுனைனா ஆகியோர் கிடைத்துள்ளார்கள்.
தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கும் எஸ்.எஸ்.தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஒரு வார்த்தையால் ஏற்படும் விளைவுகள் தான் மொத்தப்படத்தின் கதையையும் நகர்த்தி செல்கிறதாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
