Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழில் ரீமேக்காகிறது ‘தட்டத்தின் மறயத்து’...!

•On September 2, 2014
thattathin+marayathu+cashing+on
Share

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்யும் வேலை இங்கே தவறாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற படமான ‘தட்டத்தின் மறயத்து’ தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

மலையாள இயக்குனர் சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். மலையாளத்தில் இளைஞர்களை கிறங்கடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப்படத்தில் நிவின் பாலி, இஷா தல்வார் (தில்லுமுல்லு ஹீரோயின்) ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த தமிழ் ரீமேக்கிலும் இஷா தல்வார் தான் ஹீரோயினாக நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுக நடிகர் நடிக்க இருக்கிறாராம். ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜவஹர் இந்தப்படத்தை இயக்குகிறார். அடுத்த வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.