Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘என் வழி தனி வழி’ படத்தின் இசையை வெளியிட்டார் விஜய்..!

•On December 17, 2014
En-Vazhi-Thani-Vazhi-Audio-and-Trailer-Launch-Stills-81
Share

‘எல்லாம் அவன் செயல் மூலம்’ கைகோர்த்த ஷாஜிகைலாஷ் – ஆர்.கே கூட்டணி மீண்டும் ‘என் வழி தனி வழி’ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து முழுப்படத்தை எடுத்தும் முடித்துவிட்டார்கள். கதாநாயகியாக பூனம் கவுர் நடிக்கிறார்.

ஆர்.கேவின் முதல் படத்தைப்போலவே இதிலும் ஆசிஷ் வித்யார்த்தி, ராதாரவி, தம்பி ராமையா, தலைவாசல் விஜய், ரோஜா, சீதா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இசைத்தகட்டை நடிகர் விஜய் வெளியிட்டார்.

‘என் வழி தனி வழி’ போஸ்டர் டிசைனை உங்கள் மொபைல் கேமரா மூலம் க்ளிக் செய்தாலே போதும், பாடல்களையும் ட்ரெய்லரையும் பார்க்க, கேட்க முடியும் வகையில், இந்திய சினிமாவிலேயே ஆர்.கே புதிய சிஸ்டத்தை முதன்முறையாக இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். படத்தை வரும் ஜனவரி-23ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் ஆர்.கே.

 ,

 ,

 ,

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.