அபிராமிக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்த இயக்குனர்..!

கமலுடன் ‘விருமாண்டி’ படத்தில் ஜோடியாக அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய ‘வானவில்’ அபிராமியை மறக்கமுடியுமா..? முன்னணி நடிகர்களுடன் நடித்த அபிராமி கடந்த பத்து வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தவர், தற்போது ஜோதிகா நடிக்கும் மலையாள ரீமேக் படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
ஆச்சர்யமான விஷயமாக ஜோதிகாவும் கூட பத்து வருடம் கழித்து நடிக்கும் படமும் இதுதான். இந்தப்படத்தில் ஜோதிகாவின் உயிர்த்தோழியாக நடிக்கிறார் அபிராமி.. படத்தின் இயக்குனர் அபிராமிக்கு இரண்டு கேரக்டர்களை சாய்ஸாக கொடுத்தார்.
ஒன்று கிட்டத்தட்ட படம் முழுவதும் ஜோதிகாவுடன் அலுவகத்தில் ஒன்றாக பணிபுரியும் நட்பான கதாபாத்திரம். மற்றொன்று இடைவேளைக்குப்பின் என்ட்ரி ஆனாலும், அழுத்தமாக மனதில் பதியும் தன்னம்பிக்கை கொண்ட உயிர்த்தோழி கதாபாத்திரம்..
இரண்டாவது சாய்சைத்தான் அபிராமி தேர்ந்தெடுத்திருக்கிறார். மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் கனிகா. ஜோதிகாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம் என பூரித்துப்போயுள்ளார் அபிராமி
 ,
 ,
 ,
 ,
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
