Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இளைய தளபதியின் படத்திற்கு சிம்பு இசையமைப்பாரா!

•On March 26, 2017
simbu vijay
Share
simbu vijay விஜய்-62 படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பைரவா திரைப்படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் “விஜய்-61” படத்தில் இளையதளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தை 2018-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடலாம் என பேசப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்தசூழலில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள், தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் இந்த செய்தியை அதிக அளவில் பகிரத் துவங்கினர். இதனால் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது போல அனைவருக்கும் தோன்றியது. மேலும் இந்த தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். விஜயும், முருகதாஸும் இணையக் கூடிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதுதான், அதில் பணியாற்ற உள்ள கலைஞர்களை குறித்த தகவல்களும் வெளியிடப்படும்.ஆனால் சிம்பு இசையமைப்பது குறித்த செய்தி முற்றிலும் பொய் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.