ராகவா லாரன்ஸ் இயக்குனர் கரு.பழனியப்பனுடன் இணைகிறார்!..

விரைவில் தமிழ் புத்தண்டிற்கு வெளிவரவிருக்கும் ராகவா லாரென்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை தொடர்ந்து இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் இவர். காஞ்சனா மூன்றாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு, மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பி.வாசு இயக்கத்தில் உருவான சிவலிங்கா படத்தில் நடித்து முடித்தார்.
மொட்ட சிவா கெட்ட சிவா படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சிவலிங்கா வரும் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் இயக்குநர் கரு.பழனியப்பனுடன் கைகோர்க்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தை சிவலிங்கா படத்தை தயாரித்த டிரிடெண்ட் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்பு, சிவலிங்கா படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபான் கார்டுக்கு ஆதார் எண் அவசியம்!
