“அரசியலாக்காதீர்கள்” - கத்திக்கு கஜினி நாயகி சப்போர்ட்..!

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியபின்னர் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மற்ற நடிகைகளின் போட்டி காரணமாக அசினுக்கு இந்தி பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
வசூலை வாரிக்குவித்த படங்களில் நடித்தாலும் கூட, அசினுக்கு, பாலிவுட்டில் பெரிய வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் தன்னை வளர்த்துவிட்ட தமிழ் சினிமா பக்கம் தலைகாட்ட முடியவில்லை.
இந்த சூழலில் தான் கத்தி படத்தை தயவு செய்து அரசியலாக்காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள்..இல்லையில்லை.. செய்தி விடுத்துள்ளார் அசின்..
தன்னை தமிழ் சினிமாவில் கைதூக்கிவிட்ட விஜய்க்கும் கஜினி மூலம் தமிழில் மட்டுமல்லாது இந்திக்கும் கொண்டு சென்று உச்சாணிக்கொம்பில் அமரவைத்த ஏ.ஆர்.முருகதாஸுக்காகவும் இந்த அளவுக்கு கூட கூவாவிட்டால்..ஸாரி.. அவர் குரல் கொடுக்காவிட்டால் எப்படி..?
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
