கார்த்தியுடன் ஹாட்ரிக் ஜோடி சேரும் தமன்னா..!

தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தியும் ஆந்திராவின் அதிரடி ஹீரோவுமான நாகார்ஜுனும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமான விஷயம் தான். தமிழிலும் ஒரு ‘சீதம்மா வகிட்லோ சிரிமல்லி செட்டு’ மாதிரியான படம் கிடைக்கும் என்றால் சந்தோசம் தானே..?
இந்த மல்டி ஸ்டாரர் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இவர் தான் கடந்த வருடம் ராம்சரணை வைத்து சூப்பர் ஹிட்டான ‘எவடு’ படத்தை இயக்கியவர். இந்தப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.
‘பையா’, ‘சிறுத்தை’ என இரண்டு சூப்பர்ஹிட்டுகளை தொடர்ந்து கார்த்தியுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக இருக்கும் இந்தப்படத்தை பிவிபி சினிமா பிரமாண்டமாக தயாரிக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
