அடுத்தவாரம் ‘வெடிகுண்டு-குத்தகைதாரர்’ தரும் காமெடி ‘பப்பாளி’..!

‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ என இரண்டு நகைச்சுவை படங்களை இயக்கிய கோவிந்தமூர்த்தி தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘பப்பாளி’. இந்தப்படத்தில் விஜய் டிவியின் சரவணன் - மீனாட்சி தொடரின் மூலம் புகழ்பெற்ற செந்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இஷாரா நடித்திருக்கிறார். வரும் ஜூலை-13ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
உலகத்தில் அழியாத சொத்து கல்வி தான். இந்த கல்வியால் மட்டமான வாழ்கையில் இருந்த கதாநாயகன் உயர் மட்டத்திற்கு போனானா இல்லையா என்பதுதான் பப்பாளி படத்தின் திரைக்கதை. இயக்குனரின் முந்தைய படங்களைப்போல இதுவும் நகைச்சுவைப்படம்தான்.
‘மனம் கொத்திப்பறவை’ படத்தயாரிப்பாளர்களின் அடுத்த தயாரிப்பாக உருவாகி வருகிறது இந்த ‘பப்பாளி’. முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணன் நடிக்க மற்றும் இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி, கௌரவ வேடத்தில் நிரோஷா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
