Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேவிஸ்ரீபிரசாத்தின் ஆல்பம் போஸ்டரை வெளியிட்டார் கமல்..!

•On July 3, 2014
IMG_0615
Share

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக வரும் ஜூலை-13 அமெரிக்காவிலும் ஆகஸ்ட்-9 கனடாவிலும் என இரண்டு இடங்களில் பிரமாண்டமான இசைநிகழ்ச்சி நடத்த இருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத். இதில் சிறப்பம்சமாக பல அமெரிக்க இசைக்கலைஞர்கள் தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைக்க, சில ஹாலிவுட் நடனக்கலைஞர்களும் அதில் ஆட இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக முதன்முதலாக ஒரு விளம்பர பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். சமீபத்தில் இந்த விளம்பரப்பாடலை இளைய தளபதி விஜய் வெளியிட்டார். அதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் உலக நாயகன் கமல் தேவிஸ்ரீபிரசாத்தின் இந்த இசைப்பயணம் தொடர்பான போஸ்டரை வெளியிட்டு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் முற்றிலும் புதிய விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப்பாடலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட கமல் டி.எஸ்.பிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.