Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘ஜில்லா’வில் வைரமுத்து!!

•On September 27, 2013
Vairamuthu
Share
Vairamuthu தலைவா’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. நேசன் இயக்கும் ‘ஜில்லா’ படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், சூரி, மகத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காதல், செண்டிமெண்ட், காமெடி, சண்டை என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகி வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்துவும் இந்த படத்திற்கு ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை இந்தியின் பிரபல பாடகரான சோனு நிகம் பாடியுள்ளார். இனிமையாக இசையமைத்துள்ள இமான் இப்படத்தில் வைரமுத்துவின் பாடல் இடம்பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.