தனுஷுடன் நடிப்பதில் மகிழ்ச்சி – அனேகன் நாயகி!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘அனேகன்’. ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்திக், அதுல் குல்கர்னி, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ஜெகன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
படத்தின் நாயகி அறிமுகம் அமிரா. இவர் மும்பையைச் சேர்ந்தவர். பாலிவுட்டில் ‘இஸ்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை பார்த்துதான் கே.வி.ஆனந்த், அமிராவை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதுகுறித்து அமிரா கூறும்போது, “இஸ்க் படத்தின் டிரைலரை பார்த்து கே.வி.ஆனந்த் என்னை இப்படத்தில் நடிக்க அழைத்தார். போட்டோ செஷனில் திருப்தியடைந்ததும், கதையின் சுருக்கத்தை கூறி, எனக்கும் அது பிடித்துப்போக உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
நான் நடிக்க ஒத்துக்கொண்டபோது எனக்கு ஜோடியாக தனுஷ் நடிக்கிறார் என்பது தெரியாது. தேசிய விருது பெற்ற நடிகருடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் காதல் கதையின் பல தோற்றங்களை விவரிப்பதாக இருக்கும். இதற்காக இயக்குனர் என்னை 80 மற்றும் 90-களில் வெளிவந்த படங்களை பார்த்து, என்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்ற சொல்லியிருக்கிறார்” என்றார்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post‘ஜில்லா’வில் வைரமுத்து!!
