Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

துவங்கியது ரஜினி மகள் – கார்த்திக் மகன் படப்பிடிப்பு!

•On September 12, 2013
IMG_0914
Share
IMG_0914 AGS என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஐஸ்வர்யா.ஆர் தனுஷ் இயக்கும் படம் “வை ராஜா வை”. இந்த படத்தின் படப்பிடிப்பு கதாநாயகன் கெளதம் கார்த்திக் பிறந்த நாளான இன்று சென்னையில் தொடங்கியது. இயக்குனர் பாலா, வெற்றிமாறன், எங்கேயும் எப்போதும் சரவணன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். படபிடிப்பில் கதாநாயகன் கெளதம் கார்த்திக், கதாநாயகி பிரியா ஆனந்த், விவேக், இயக்குனர் எஸ்.எம்.வசந்த் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் பங்கு பெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவு - வேல்ராஜ். இசை – யுவன் ஷங்கர் ராஜா. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.