தீயா வேலை செய்யணும் குமாரு படத்துக்கு “U” செர்டிபிகட்!!

கடந்த வருடம் கலகலப்பு கொடுத்த சுந்தர்.சி அதே வேகத்தில் இரண்டு படங்களை இயக்கிவிட்டார். தற்போது இயக்கி வந்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்துக்கு சென்சார் போர்டு “U” செர்டிபிகட் கொடுத்துள்ளது.
சித்தார்த், ஹன்சிகா, சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் கல கல காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் முடிந்து சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு நில்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் செர்டிபிகட் கொடுத்தனர். படம் வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் 28 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானில் படமாக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
