டி.பி.கஜேந்திரன் இயக்கும் “ஆசை தோசை”!

வீடு மனைவி மக்கள், தாயா தாரமா, பெண்கள் வீட்டின் கண்கள், நல்ல காலம் பொறந்தாச்சு, பாண்டி நாட்டு தங்கம், மகனே என் மருமகனே, எங்க ஊரு மாப்பிள்ளை, பட்ஜெட் பத்மநாபன் உட்பட இருபது படங்களை டைரக்ட் செய்த டி.பி.கஜேந்திரன் தற்போது இருபது படங்களுக்கு மேல் காமெடி, குணசித்திர நடிகராக நடித்து கொண்டிருக்கிறார்.
தற்போது அவர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். அந்த படத்திற்கு “ஆசை தோசை” என்று பெயரிட்டுள்ளார். இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருக்கிறார். ஏராளமான நகைச்சுவை பட்டாளங்களுடன் காமெடியாக படத்தை இயக்கவுள்ளார். டி.பி.கஜேந்திரனின் முத்துலட்சுமி மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
