Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முடியும் தருவாயில், நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்!!

•On October 15, 2013
DSC_6758
Share
DSC_6758 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு பக்கம் இருக்கும். திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார். அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல்வடிவில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில், ஒரு ஏக்கரில் ஆஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டுக்கொண்டுருக்கிறது. ஏறக்குறைய 35 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் ஒரே கல்லில் சிலையாக வடிக்கப்பட்டது. டன் எடை கொண்ட அந்த சிலையை சென்னைக்கு வரவழைத்து பீடத்தில் பொருத்தினார்கள். அதற்கான கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள். அதை பொருத்தும் பணி நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் உள்ளிருந்து  அபிசேகம் செய்யும் அதே முறையை பயன்படுத்தி இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அர்ஜுன் தெரிவித்தார். 2006ஆம் ஆண்டிலிருந்து இந்த கோவில் கட்டும் திருப்பணியை செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம் என்று அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.