மாறி மாறி நடிக்கும் சூர்யா, கார்த்தி!!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் ‘சிங்கம் 2. அதன்பின் இரணடு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா, ஆனால் இரண்டு படத்தின் படப்பிடிப்புமே இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.
தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்பட வேலைகள் துவங்கியுள்ளன. இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஆக்சன் கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்துக்கு ‘ரவுடி’ என பெயர் வைத்துள்ளதாக செய்தி பரவி உள்ளது. இன்னொரு புறம் சூர்யாவை வைத்து கவுதம்மேனன் இயக்கும் படவேலைகளும் ஆரம்பித்துள்ளன. இதில் ஜோடியாக நடிக்க திரிஷாவை பரிசீலிக்கின்றனர். இரண்டிலும் மாறிமாறி நடிக்க உள்ளார் சூர்யா.
அண்ணனை போலவே தம்பி கார்த்தியும் பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்து முடித்துவிட்டு தற்போது ஓய்வில் உள்ளார். இதனையடுத்து அவரும் இரண்டு படங்களில் மாறி மாறி நடிக்க உள்ளார். ஒன்றை “அட்டகத்தி” ரஞ்சித் இயக்குகிறார். வடசென்னையை மையமாக கொண்டு உருவாகிறது. மற்றொரு படத்தை “சேட்டை” கண்ணன் இயக்குகிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
