Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாண்டிய நாட்டை வளைத்த வேந்தர்!!

•On September 23, 2013
Pandiya-Nadu-Movie-Poster
Share
Pandiya-Nadu-Movie-Poster விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து தனது முதல் தயாரிப்பாக பாண்டிய நாடு படத்தை தயாரித்து வருகிறார் விஷால். விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். விக்ராந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். முதல் முறையாக சுசீந்திரன் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடல் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவீஸ் பெற்றுள்ளது. இதற்காக சில வாரங்களுக்கு முன்பே விஷால் - வேந்தர் மூவீஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் விஷால் திருப்தி அடையாததால் படத்தைத் தர மறுத்துவிட்டார். இப்போது, இரு தரப்பும் ஒரு சுமூக முடிவுக்கு வந்திருப்பதால், படத்தின் உரிமையைத் தர ஒப்புக் கொண்டார் விஷால். தலைவா படத்துக்குப் பிறகு வேந்தர் மூவிஸ் வெளியிடும் பெரிய படம் பாண்டிய நாடு. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.