Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னையில் சிங்கங்களின் சங்கமம்!

•On May 28, 2013
Singam 2 Audio Launch Posters
Share
Singam 2 Audio Launch Posters சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா இணைந்துள்ள படம் சிங்கம் 2. இது சிங்கம் படத்தின் இரண்டாவது பாகம். சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி நடக்கிறது. இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளுமாறு சிங்கம் படத்தின் இந்தி மற்றும் கன்னட ரீமேக்குகளில் நடித்த அஜய் தேவ்கன் மற்றும் சுதீப் ஆகியோரை இயக்குனர் ஹரி அழைத்துள்ளார். மேலும் சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்த பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.