Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சத்தமே இல்லாமல் அரை டஜன் படங்களில் நடிக்கும் நாயகி!!

•On May 28, 2013
laks
Share
laks சுந்தரபாண்டியன், கும்கி போன்ற வெற்றிப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான லக்ஷ்மி மேனன் நல்ல நடிகையாக நிரூபித்தார். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் தனக்கு பள்ளி தேர்வுகள் இருப்பதாக நிராகரித்தார். பின்னர் மீண்டும் படங்களை ஒப்புகொள்ள ஆரம்பித்தார். நிறைய படங்கள் அவரை தேடி வந்தது. அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் லக்ஷ்மி மேனன். சசிகுமாரின் குட்டிப்புலி படத்திலும் இவர் தான் நாயகி. வரும் 30-ம் தேதி வெளியாகிறது. விமல் நடிக்கும் மஞ்சப்பை படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குகிறார் சற்குணம் உதவியாளர் நவீன். இந்த படத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். இதையடுத்து பிரபு மகன் விக்ரம் பிரபுவுடன் நடித்த லக்ஷ்மி மேனன், தற்போது கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிக்கும் சிப்பாய் படத்தின் நாயகி. இந்த படத்தை சிலம்பாட்டம் இயக்குனர் சரவணன் இயக்குகிறார். விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் மதுரையை மையப்படுத்தி எடுக்கப்படும் பாண்டிய நாடு படத்தில் நடிக்கிறார் லக்ஷ்மி மேனன். இந்த படத்தில் மூத்த இயக்குனர் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். ஆயுத எழுது படத்திற்கு பின் அவர் நடிக்கும் படம் இது. பீட்சா என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படத்தினை மதுரை நகரை களமாக்கி படமாக்கப் போகிறாராம். ஹீரோ சித்தார்த் என முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் கதாநாயகி தேடுதல் வேட்டையில் இயக்குநர் மனதில் கிளிக் ஆனது லட்சுமி மேனன் தானாம். மேலும் வெற்றிப்பட நாயகன் விஜய் சேதுபதி தயாரித்து நடிக்க இருக்கும் சங்கு தேவன் என்ற படத்திலும் லக்ஷ்மி மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.