Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சமந்தா – அஞ்சலி இணைய “ஆனந்தம் ஆனந்தமே”

•On October 11, 2013
mmsmm2hdebh_medium
Share
mmsmm2hdebh_medium விஜி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தாளபள்ளி சந்திரசேகர், பிரசாத் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ”ஆனந்தம் ஆனந்தமே” என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் “சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி சென்ற ஆண்டு வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர திரையுலகினரே அதிசயிக்கும் விதமான படமானது. நடிகை அஞ்சலிக்கு மிக பெரிய நட்சத்திர அந்தஸ்து ஏற்ப்படுத்தி கொடுத்ததும் இந்த படமே! இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். பிரகாஷ்ராஜ்  மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - மிக்கி ஜே.மேயர்  மற்றும் மணிசர்மா. இயக்கம் – ஸ்ரீகாந்த். இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் A.R.K.ராஜராஜா. முழுக்க முழுக்க குடும்ப பின்னணி கொண்ட இந்த படம் ஆந்திராவில் ஏற்படுத்திய வசூல் சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை. தமிழ் ரீமேக் உரிமைக்காக நிறைய பேர் முயற்சி செய்தும் இந்த படத்தின் பட்ஜெட்டை கேள்விபட்டு எல்லோரும் பின்வாங்க தற்போது மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.