ஒரு பாடல் காட்சியில் 400 உடைகள்!!

விஜயசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் “ரணம்”. இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் ஹர்சன் - பூனம்கவுர் நடிக்க 400 விதமான உடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் – கதாநாயகிக்கு 400 உடைகள் பயன்படுத்தி இருப்பது இதுவே முதன்முறை என்று இயக்குனர் விஜயசேகரன் கூறி இருக்கிறார்.
“எங்கட போனே ரோமியோ
“என்னடா ஆனே ரோமியோ”
“ரெண்டு நாள் தூங்கலியே ரோமியோ”
என்ற இந்த பாடல் காட்சி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - மரியா மனோகர் அடுத்தகட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்குகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
