‘முனீஸ்காந்தை’ பாராட்டிய ‘ரஜினிகாந்த்!’

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் சமிபத்தில் வெளியான படம் "முண்டாசுபட்டி". சமீபத்தில் சூப்பர் ஸ்டாருக்காக ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்து ரசித்த ரஜினி, முண்டாசுபட்டி தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார்.
படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டினார், குறிப்பாக முனிஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாக சூப்பர் ஸ்டார் கூறினார்.
படத்தின் இயக்குனர் ராம்குமார், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார்.
குடும்பத்துடன் ரசிக்க கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமார் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
