தனுஷை விட்டு போன தனுஷின் ‘ஆஸ்தான இயக்குனர்”

தனுஷின் ஆஸ்தான இயக்குநராக அறியப்பட்ட மித்ரன் ஆர்.ஜவஹர் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கினார். அதன்பிறகு கிட்டதட்ட நான்கு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். முதல் மூன்று படங்களை போலவே இந்த படமும் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான்.
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘சுவாமி ரா ரா’ படத்தை தான் தமிழில் இயக்குகிறார். ‘சாமியாட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிப்பதோடு தன் சொந்தப்பட நிறுவனமான கோல்டன் ப்ரைடே பிலிம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் ஸ்ரீகாந்த். ஏற்கனவே ’நம்பியார்’ படத்தையும் தயாரித்து இருக்கிறார். இது இரண்டாவது படம்.
நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல், இலகுவான கதை, மிருதுவான காட்சிகள் வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஜாலி வேடிக்கை வினோதப் படமாக ‘ சாமியாட்டம்’ உருவாகிறது.
களவு போகும் தொன்மையான பிள்ளையார் சிலை பலரிடம் கை மாறி பல சுவாரஸ்யப் பயணங்களை மேற்கொள்கிறது. அந்த பயணம் சார்ந்த காமெடி கலாட்டாதான் படக்கதை. கதை காணாமல் போன பிள்ளையாரின் கோணத்தில், பார்வையில் சொல்லப்படும் விதம் தனிச்சுவை. ‘It is a Fun Film' என்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர்.
ஸ்ரீகாந்த் ஜோடியாக மும்பை நாயகி ஒருவர் நடிக்கிறார். எஸ்.எஸ்.மியூசிக். பூஜா, முருகதாஸ், சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கியமான ‘திடுக்’ வேடத்தில் பவர் ஸ்டார் வருகிறார். ஸ்ரீகாந்த், பூஜா, முருகதாஸ் மூவரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் சேர்ந்தே திருடுவது வழக்கம். இவர்கள் கையில் திருட்டுப் போன தொன்மையான பிள்ளையார் சிலை கிடைக்க அந்த சாமிபடுத்தும் பாடு அடக்க முடியாத சிரிப்பு வெடி காட்சிகளாகின்றன.
சென்னை, பாண்டிச்சேரியில் முதல்கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் முடிந்து, அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளனர் படக்குழுவினர்.
படத்துக்கு ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன். இவர் ‘யுவன் யுவதி’, ’என்னமோ ஏதோ’ படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஷ்வரன். சுமார் 400 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இவரது முதல் படம். 5 பாடல்கள் இதில் உள்ளன. விவேகா உள்பட சில கவிஞர்கள் எழுதுகின்றனர். குறுகிய காலத் தயாரிப்பாக ‘சாமியாட்டம்’ வளர்ந்து வருகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
