Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிறிய இடைவெளிக்கு பின் பூஜா நடிக்கும் த்ரில்லர் படம் "விடியும் முன்"!

•On June 1, 2013
Vidiyum Mun (5)
Share
Vidiyum Mun (5) ஜே.ஜே. படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா, தொடர்ந்து அஜீத், மாதவன், ஆர்யா, ஜீவா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். கடைசியாக பாலாவின் நான் கடவுள் படத்தில் கண் தெரியாத பெண்ணாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் சில தெலுங்கு படங்களிலும், சில தமிழ் படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார். தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த பூஜா தற்போது மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகி வரும் விடியும் முன் என்ற படத்தில் நடித்து வருகிறார் பூஜா. இப்படம் தனக்கு தமிழில் மீண்டும் ஒரு பெரிய பிரேக் தரும் என்று நம்பிக்கையாக கூறுகிறார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கூத்துப்பட்டறையை சேர்ந்த முத்துக்குமார் நடிக்கிறார். இவர் ஏற்கனவே வேட்டை, வெப்பம், தடகா (வேட்டை படத்தின் தெலுங்கு பதிப்பு) போன்ற படங்களில் நடித்தவர் ஆவார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.