Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இளமை பொங்கும் கல்லூரி காதல் “குளுகுளு நாட்கள்”!

•On June 1, 2013
kulu
Share
kulu முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தை ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்கி வருகிறார் காதர்ஹாசன். துள்ளத் துள்ள இளமை பொங்கும் கல்லூரி காதல் கதை என்பதால் படத்திற்கு குளுகுளு நாட்கள் என்று பெயர் வைத்திருக்கிறோம். காதலைப் பொருத்தவரை ஆண்களுக்கு ஜாலியாக அல்லது விளையாட்டாகக் கூட இருக்கலாம். பெண்களுக்கு அது நேர் எதிர். சாமான்யமாக ஒருத்தனைக் காதலித்துவிட மாட்டார்கள். அப்படி காதலித்துவிட்டால், அதில் தீவிரமாக இருப்பார்கள். காதலை உயிர் மாதிரி பார்ப்பார்கள். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். பசங்க ஒரு பெண்ணை காதலிக்கும்போது கூட, வளைவுநெளிவுகளுடன் இன்னொருத்தியை பார்த்து விட்டால் ட்ரை பண்ணலாமான்னு நினைப்பார்கள். ஆனால் பெண்கள் ஒருத்தனை காதலித்துவிட்டால் அதன்பிறகு எவ்வளவு பெரிய மன்மதன் வந்து நின்றாலும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். அந்த மாதிரி ஒரு கருவை மையப்படுத்தி நகர்வதுதான் குளு குளு நாட்கள். புதுமுகங்களான ஸ்ரீஜித் விஜய், ஹ்ரிஷ், ஷாஃபி, அர்ஜூன், மாளவிகா, சுபிக்ஷா, தீபா ஆகியோர் அறிமுகமாக, உடன் நடிக்கிறார்கள் எம்.எஸ்.பாஸ்கர், யுவராணி, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். காமராவை உத்பல்(சாமுண்டி) கையாள, எடிட்டிங்கை மென்டோஸ் அண்டனியும், கலையை அர்க்கன் அழகுபடுத்த, லாரென்ஸ் சிவாவும், பாப்பி ஆகியோர் நடனம் அமைக்க போக்கிரி படப்புகழ்  வசனகர்த்தா வி.பிரபாகர்  வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் காதர்ஹாசன். சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி, கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.