MP3 தொழில்நுட்பம் விடைபெறுகிறது.....

இதுவரை நம் உபயோகித்து வந்த எம்.பி 3 தொழில்நுட்பம், இனி உபயோகத்தில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடல்களின் மின்னணு கோப்புகளை 95 சதவீத அளவுக்கு குறைக்கும் திறன் பெற்றது எம்.பி 3 தொழில்நுட்பம். இதன் காரணமாக சிறிய இடத்திலும், அதிக பாடல்களை பதிவேற்றம் செய்ய முடியும். எனவேதான் சிடிக்கள் மற்றும் செல்போன்கள் பிரபலமாகத் துவங்கிய காலத்தில், உலகெங்கும் எம்.பி 3 முறையில் பாடல்கள் பதிவு செய்யும் முறை சக்கை போடு போட்டது.
கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த எம்.பி 3 தொழில்நுட்பத்தின் லைசென்சை திரும்பப் பெறுவதாக, அந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்த பிரான்ஹோஃபர் என்ற நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக தொழில்நுட்ப உலகிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது எம்.பி 3 தொழில்நுட்பம்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எம்.பி 3க்கு அடுத்தகட்டமாக பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதாலும், அந்த புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தற்போதைய மின்னணு சாதனங்களை தயாரிக்கப்பட்டு வருவதாலும் இந்த முடிவை பிராம்ஹோபர் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
