கோடைக்கால விருந்தாக வருகிறது "சங்கிலி புங்கிலி கதவ தொற"...

"சங்கிலி புங்கிலி கதவ தொற" என்னடா இது பெயர் யாரு இந்த படத்துல இருக்கா பார்த்தா. நம்ம ஊரு சின்ன பட்டாளமே நடித்து இருக்காங்க. அது என்னனு சொல்ற வாங்க.
அதாவது இந்த படம் டைரக்டர் ஐக் என்னடா இவரு பெயரும் வித்தியாசமா இருக்கு பாக்குறிங்களா அட அது ஒன்னு இல்லங்க அவர் பெயர் ஐயப்பன் அது சுருக்கி ஐக் வச்சுட்டாரு. இவர் யாருனா நம்ம m.r.ராதா பேரன்தாங்க. இவர் நிறைய டைரக்டர் கிழ வேல செஞ்சுட்டுதா வந்து இருக்கார். மற்றும் நம்ம அட்லி தான் தாயரிக்கிறார் அவருடைய சொந்த நிறுவனமான 'ஏ ஃபார் ஆப்பிள்' நிறுவனம் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் கதாநாயகன் ஜீவா. இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. இவர்களுடன் ராதா ரவி ,ராதிகா சரத்குமார் ,சூரி ,கோவை சரளா ,தம்பி ராமையா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க விஷால் சந்திரா சேகர் இசை அமைத்துள்ளார்.
தயாரிப்பாளர் அட்லீ கூறுகையில் " சங்கிலி புங்கிலி கதவ தொற " இப்படத்தில் ஜீவா தனக்கே உரிய பாணியில் மிக சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார். என்னுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வெற்றியை தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினார் அட்லீ . இப்படம் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகிறது என்பதை மிக பெருமையுடன் அறிவிக்கிறேன்
இப்படம் திகில் கலந்த காமெடி படமாகவும் குடும்பங்கள் உறவுகள் எவ்ளோ முக்கியம் என்று கூறும் வகையில் நீங்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளியுங்கள். மறந்துடாதிங்க அனைவரும் வர மே 19 தேதி அன்று திரையரங்கு சென்று பாருங்கள் Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
