#metoo வில் சிக்கினார் அக்ஷன் கிங் : பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் குறித்து தெரிவித்து உள்ளார்.தமிழகம் மட்டுமின்றி இந்திதா முழுவதும் மீ டூ விஷ்வ ரூபம் எடுத்து வருகிறது.இதற்கிடையில் பாடகி சின்மயி வைரமுத்து மீது தொடுத்துள்ள பல்வேறு குற்ற சம்பவங்கள் தான் மக்கள் மத்தியில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் பல பெண்கள் தாமாக முன்வந்து மீ டூ என பதிவிட்டு தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்த நபர்கள் மீது பாலியல் வன்புணர்வு புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது வரை பல்வேறு பிரபலங்கள் பெயர் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தற்போது கன்னட நடிகையான சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் உடன் 'விஸ்மயா' என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றசாட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பெரிய ஆதரவு ஒன்றும் வரவில்லை. அதற்கு மாறாக நடிகையை பல கேள்விகள் கேட்டு வருகின்றனர் மக்கள்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
