Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் நடிக்க வருகிறார் காயத்ரி ரகுராம்!!

•On September 16, 2013
gayathriraguram16913_m
Share
gayathriraguram16913_m டான்ஸ் மாஸ்டர் ரகுராம் மகள் காயத்ரி ரகுராம். இவர் தமிழில் ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘விசில்’, ‘பரசுராம்’, ‘ஸ்டைல்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சில தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியரான தீபக் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டு செட்டிலான அவர், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கேயே திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். பின்னர் ‘கந்தசாமி’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தலைவா’ உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை’ படத்தில் கவுதம் கார்த்திக்-கின் அக்காவாக நடிக்கிறாராம். இப்படத்தில் நாயகியாக ப்ரியா ஆனந்த், விவேக், டைரக்டர் எஸ்.எம்.வசந்த், ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக இயக்குநர் வசந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.