Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிரபல பாடகி சின்மயி காதல் திருமணம்!!

•On September 16, 2013
chinmayi-rahul
Share
chinmayi-rahul பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு விரைவில் திருமணம் என்றும், அது ஒரு காதல் திருமணம் என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். 2002-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. இந்த பாடலுக்கு தான் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் பல படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிவாஜி படத்தில் இவர் பாடிய ‘சஹானா சாரல் தூவுதோ’, எந்திரன் படத்தில் ‘கிளிமஞ்சாரோ’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். இதுதவிர தமிழில் நடிக்கும் முன்னணி நடிகைகளுக்கு இவர் தான் பின்னணி குரல் அதாவது டப்பிங் பேசுவார். இந்நிலையில், சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துகொள்ளப்போகிறார். இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சின்மயியின் தாய் பத்மாசினி உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும், எனது மகள் சின்மயிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது. விரைவில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார். நடிகர் ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திலும் நடிக்கிறார். மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.