A.R முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ஸ்பைடர்

நம் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான A.R முருகதாஸும், தென்னிந்தியாவின் உச்சத்தில்
உள்ள நட்சத்திரங்களில் ஒருவரான மகேஷ் பாபுவும் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது, தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஹிந்தி பட உலகில் சக்கை போடு போட்ட 'தனு வெட்ஸ் மனு:ரிட்டர்ன்ஸ்' படத்தில் மாபெரும் ஹிட்டான 'பண்ணோ' பாடலை பாடி புகழின் உச்சிக்கு சென்றுள்ள பாடகர் பிரிஜேஷ் சாண்டில்ய, இந்த 'ஸ்பைடர்' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இது குறித்து பிரிஜேஷ் சாண்டில்யா பேசுகையில்:-
A.R முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற மதிப்புமிக்க ஜாம்பவான்களோடு பணிபுரிவது எனது பெரும் கனவாகும். சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ள இவர்கள் இன்னமும் எளிமையாக இருப்பதை கண்டு நான் வியந்தேன். இந்த படத்தில் பாடல் பாடும் வாய்ப்பளித்ததிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இசைக்கு மொழிகளோ எல்லைகளோ இல்லவே இல்லை என்பதை நம்பும் எனக்கு, இப்பாடல் மூலம் தென்னிந்தியா சினிமாவில் நுழைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜ் சாரின் இசையில் நான் பாடியிருக்கும் இப்பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இது ஒரு மாபெரும் ஹிட் பாடல் ஆகும் என உறுதியாக கூறுவேன். இசை பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் ஹாரிஸ் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பெருமை தான். இப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவர்ந்து மயக்கும் என நம்புகிறேன் என பிரிஜேஷ் சாண்டில்யா கூறியுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் கைது!
