70 குழந்தைகள் பலியான சம்பவம், தலைமறைவான டாக்டர் கைது!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது!
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குழந்தைகள் மருத்துவர் கபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தது.
மருத்துவமனைமுதல்வர் ஆர்.கே மிஸ்ரா மற்றும் கபீல் கான் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து கபீர்கான் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்பட்டது. அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
