59வது பழக் கண்காட்சி துவக்கம்: குன்னூர் சிம்ஸ் பூங்கா...

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கியுள்ள 59வது பழக் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோடை சீசசீன் இறுதி நிகழ்ச்சியாக சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி பூங்கா நுழைவு வாயிலில் பழங்கலாள் ஆன பிரம்மாண்ட கோபுரமும், பூங்காவின் உட்புறம் திராட்சைகளால் உருவாக்கப்பட்ட வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் என இயற்கை காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கண்காட்சி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதால் பலர் வரிசையில் காத்திருந்து புகைபடம் எடுத்துச் சென்றனர்.
இதேபோன்று திராட்சை மற்றும் பப்பாளியால் உருவாக்கப்பட்ட ஆடு, காங்கேயம் காளை, பலாப்பலத்தால் உருவாக்கப்பட்டுள்ள செம்மரி ஆடு போன்றவை பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. திராட்சை, மாம்பலம், ஆரஞ்சு தோல்களை வைத்து ஆடு, மாடு போன்ற பல்வேறு வன விலங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் விளையும் அரிய வகை பழ வகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளனComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
