Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

2.0 கதாநாயகி கற்று வரும் சீன தற்காப்பு கலை...

•On June 17, 2017
emi
Share
emi நடிகை எமி ஜாக்சன் ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்துக்காக, சீனாவில் தற்காப்புக்கலையை பயின்று வருகிறார். சீன கலையை கற்று வரும் எமி தற்போது பிரிட்டிஷ் இயக்குநரான ஆண்ட்ரூ மோர்கன் இயக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ஆங்கிலத்தில் தயாராகும் இந்தப் படம், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க கேட்டபோது, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம் எமி. காரணம், ஆக்ஷன் படத்தில் நடிப்பதுதான் அவருடைய கனவாகவும் இருந்தது. அத்துடன், இந்தப் படத்தில் ஹீரோ இல்லாமல், சோலோ லீடாகவும் நடிக்கிறார். இந்த வருட இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் நிலையில், மூன்று மாதங்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார் எமி ஜாக்சன். இதற்கான சீனா சென்று, அங்கு தற்காப்புக் கலைகளைப் பயின்று வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், சீனாவில் தான் படமாக்கப்படவுள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.