Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

2 தங்கம் வென்ற விருதுநகர் மாணவி: சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி...

•On May 21, 2017
subasri
Share
subasri விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மீன்ராஜ் என்பவரது மகள் சுபஸ்ரீ. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு முடித்து 8ம் வகுப்பு செல்லும் சுபஸ்ரீ, சிறு வயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதையறிந்த இவரது பெற்றோர் சாத்தூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இவரை சேர்த்து பயிற்சி அளித்தனர். அங்கு 2 ஆண்டுகள் தீவிரப் பயிற்சி பெற்ற சுபஸ்ரீ, பின்னர் கோத்தகிரியில் உள்ள பள்ளியில் பயின்றபோது 4 ஆண்டுகள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் சுபஸ்ரீ மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மலேசியாவின் மாலாகாவில் நடை பெற்ற சர்வதேச அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 10-12 வயது பிரிவில் பங்கேற்று அவர் விளையாடினார். இதில் 500 மீட்டர் தூரத்தை 56 நொடிகளிலும், ஆயிரம் மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களிலும் கடந்து இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதுகுறித்து, மாணவி சுபஸ்ரீ கூறும் போது, “சிறு வயதில் இருந்தே ஆர்வத்தோடு ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றேன். எனது வெற்றிக்கு பெற்றோரும், பயிற்சியாளர்களுமே காரணம். 2020-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்டிங் போட்டி சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி சேர்க்கப்பட்டால் அதில் பங்கேற்று தங்கம் வெல்வதே எனது லட்சியமாக இருக்கும்” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.