2டி அனிமேஷன் படமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’..!

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்க இயக்குனர் மணிரத்னமே முயற்சி எடுத்து சில காரணங்களால் அதை கைவிட்டுவிட்டார். இப்போது இந்த நாவலை 2டி அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் வளமான தமிழகம் அமைப்பை சேர்ந்த சரவண ராஜாவும் அனிமேஷன் இயக்குனரான கார்த்திகேயனும்.
கிட்டத்தட்ட 2500 பக்கங்களுக்கு மேல் அடங்கிய இந்த நாவலை இரண்டரை மணி நேரம் ஓடும் படமாக, சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறாகள். இரண்டு வருட தயாரிப்பாக உருவாகும் இந்த அனிமேஷன் படத்தை வரும் 2017 ஜனவரியில் வெளியிடும் வகையில் திட்டமிட்டிருக்கிறார்கள்.
 ,
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
