ஸ்ருதியை சீண்டும் குஷ்பூ...!

வரலாற்று படமாக உருவாக உள்ள ‘சங்கமித்ரா’வை சுந்தர் சி இயக்கவுள்ளார். அதில் ஆரியா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஸ்ருதி திடீரென விலகினார். இதுதொடர்பாக நடிகையும், சுந்தர் சி-யின் மனைவியுமான குஷ்பூ, அவரது மைக்ரோ ப்ளாக்கிங் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சங்கமித்ரா இந்தியாவில் உருவாகும் அதிக பட்ஜெட் படம். அப்படிப்பட்ட படத்தை ஒழுங்காக திட்டமிடாமல் யாரும் தொடங்கமாட்டார்கள். மேலும் சங்கமித்ரா திரைப்படம் குறித்து சிலர் தேவையற்ற வார்த்தைகளை பிரயோகப் படுத்தி உள்ளார்கள். சங்கமித்ரா படத்திற்கான வேலைகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் படப்பிடிப்பு என்பது 30% மட்டுமே. அதற்கு முன்பாக செய்யப்பட வேண்டியவை 70% பணிகள் உண்டு. தங்களின் சொந்த பிரச்னைகளுக்காக மற்றவர்களை குறைக் கூறக்கூடாது. தங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்பவர்களுக்கு, நீண்ட எதிர்காலம் அமையும் என்று மைக்ரோ ப்ளாக்கிங் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
