Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'யு' சான்றிதழ் பெற்ற உதயநிதியின் 'பொதுவாக என் மனசு தங்கம்'!

•On July 19, 2017
uthayanithi
Share
uthayanithi 'சரவணன் இருக்க பயமேன்' படத்தை தொடர்ந்து 'பொதுவாக என் மனசு தங்கம்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் உதயிநிதி. விக்ரமன் மற்றும் பொன்ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய தளபதி பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 'ஒரு நாள் கூத்து' படத்தின் நாயகியான நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தணிக்கைக்குழுவுக்கான காட்சி நேற்று நடைபெற்றது. படத்தைப் பார்த்த தணிக்கை குழவினர், அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் இருக்கும் இப் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தை வியாநகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்ய படைக்குழு திட்டமிட்டிடுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.