Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஸ்கிரிப்ட் ரெடி... ஆனால் ஹீரோ யார்..?

•On October 20, 2014
selva
Share

இரண்டாம் உலகம்’ படம் சரியாக போகாத சூழ்நிலையில், செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டார். இந்தப்படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா தயாரிக்கிறது.

இனி ஹீரோ பிக்ஸ் பண்ணவேண்டியதுதான் பாக்கி... படத்தை தனுஷை வைத்துத்தான் இயக்குவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்னொரு பக்கம் சிம்பு நடிப்பார் என்று சொல்லப்படுவது பரபரப்பான விஷயம் தான்.

சினிமாவில் இரண்டு விஷயங்கள் நடக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஒன்று கௌதம் மேனன் படத்தில் தனுஷ் நடிப்பது.. இன்னொன்று செல்வராகவன் படத்தில் சிம்பு நடிப்பது.. இது இரண்டும் நடந்தால் அது கிட்டத்தட்ட சூரியன் மேற்கே உதிப்பதற்கு சமமானது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.