வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம்

வைக்கம் விஜயலட்சுமி கேரளாவைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே பார்வை குறைபாடு உடையவர். இவருடைய குரல் அழகினால் அனைவரது மனதையும் கவர்ந்தவர். சென்னையில் வாழ்ந்த இவர். சினிமா பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமானார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். பல இசைமேதைகளின் மனங்களை வென்றவர். பற்பல விருதுகளையும் குவித்துள்ளார்.
தனித்த வெண்கல குரலால் ரசிகர்களை ஈர்த்தவர். இவரது பாடல் இடம்பெற்றால் படம் ஹிட் என பெயர் பெற்றவர்.
மிகச் சமீபத்தில் இவருக்கும் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் மார்ச் 29ந்தேதி நடக்கவிருந்த நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணமகன் சந்தோஷ் விஜய்லக்ஷ்மியின் தாயாரை தனியாக விட்டு விட்டு வரவேண்டும், சினிமாவில் இனிமேல் பாடக்கூடாது என கண்டிஷன்கள் திடீரென போட்டதால் அதிர்ச்சியடைந்த விஜயலக்ஷ்மி திருமணத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
