Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘வேல்’ இருந்தால் நிச்சயம் ‘ஜெயம்’ தான் – இயக்குனர் ராஜா

•On June 17, 2014
Jayam
Share
Jayam ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள கார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகியுள்ளது. பி.வி.ஸ்ரீநிவாஸ் தயாரித்துள்ளார். தெலுங்கில் வெற்றிவாகை சூடும் இளம் நாயகன் ‘நிகில்’ ஹீரோவாக தமிழில் அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் சந்து இயக்கியுள்ளார். சேகர் சந்திரா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் ‘எடிட்டர்’ மோகன், இயக்குனர்கள் ‘ஜெயம்’ ராஜா, மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர். அப்போது பேசிய இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா, “மேடியிளிருக்கும் இந்த படக்குழுவை பார்க்கும்போதே அவர்கள் எவ்வளவு ஜாலியாக வேலை செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ட்ரைலரை பார்க்கும்போதே மிகவும் அற்புதமான படமாக வெளியாகி இருக்கும் என தெரிகிறது. என்னுடைய முதல் படம் ஜெயத்திலும் ‘வேல்’ இருந்தது. இந்த படத்திலும் ‘வேல்’ இருக்கிறது. இதுவும் நிச்சயம் வெற்றி பெரும் என்பது உறுதி” என்றார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.