‘முண்டாசுபட்டி’ தான் வசூலில் டாப் – சி.வி.குமார்

திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்த படம் ‘முண்டாசுப்பட்டி’. விஷ்ணு, நந்திதா நடித்த இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. புதுமுக இயக்குனர் ராம் இயக்கியிருந்தார். இதுதான் சி.வி.குமார் தயாரித்த படங்களிலேயே டாப் வசூல் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என முதல் நான்கு நாட்களையும் சேர்த்து மொத்தம் 3.9 கோடி வசூல் செய்துள்ளது ‘முண்டாசுபட்டி’. விஷ்ணு நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமும் இதுதான். சி.வி.குமார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களும் பெரும் வெற்றியை பெற்றது நினைவிருக்கலாம்.
முண்டாசுபட்டியின் வெற்றியை தொடர்ந்து திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மேலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
