விஷால் தலைமையில் களம் இறங்கும் பிரபலங்கள்.

ஏபரல் 2 அன்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பரபரப்பு கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிலையில் தாயரிபாளர்களிடையே போட்டியில் ஐந்து அணி களம் இறங்குகிறது.
விஷால் தலைமையில் களம் இறங்கும் அணி பத்திரக்கையாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய விஷால்
இன்னும் எங்கள் அணிக்கு பெயர் வைக்கவில்லை. ஏப்ரல் 2 அன்று நடக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். சட்டப்படி நான் தேர்தலில் நிற்க முடியும்.
கடந்த 10 வருடங்களாக தயாரிபாளர்களின் குமுறலை தயாரிப்பாளர் சங்கம் கண்டுகொள்ளவில்லை. இது வரை இருந்த அணிகள் செய்யாததை செய்யவே நாங்கள் வருகிறோம்.
நாங்கள் நடிகர் சங்கத் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். நடிகர் சங்கக் கட்டிடம் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறோம்.
இனி தயாரிப்பாளர்கள் எவரும் எந்தக் கஷ்டமும் படக்கூடாது. என் தந்தை தன் படம் வருவதற்காக லேப் வாசலில் என்னைக் காப்பாற்றுங்கள் எனப் பிச்சை எடுக்கும் நிலையை பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி அவல நிலை வேறு எவருக்கும் இனி வரக்கூடாது அதற்காகவே நாங்கள் இந்தத் தேர்தலில் நிற்கிறோம்.
நாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை ஒரே வருடத்தில் நிறைவேற்றுவோம் என்று பேசினார்.
இவர் அணியில் பிராகாஷ்ராஜ், மிஷ்கின், கௌதம் மேனன், ஆர்யா, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, பார்த்திபன் ஆகியோர் நிற்கிறார்கள். மேலும் சுந்தர் சி, பாண்டியராஜ், மன்சூர் அலிகான் போன்றவர்களும் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் அவர்களுக்குள்ளாகவே பல அணிகளாக பிரிந்து கிடக்கும் நிலையில் விஷால் அணி மிகுந்த பலத்துடன் களம் இறங்குகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசென்னையில் தொடரும் அவலநிலை!.. இதற்கு தீர்வு ?..
Next Postநட்டியின் "என்கிட்ட மோதாதே"
